சிறைச்சாலையில் நடந்த திருமணம்! மண்டபம் என்னாச்சி ? காரணம் இதுதாங்க!

Default Image

பஞ்சாப் மாநிலம் நபா பகுதியை சேர்ந்தவர் மன்தீப் சிங் என்ற துருவ். இவர் பஞ்சாயத்து தலைவரை கொன்ற குற்றத்திற்காக, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 35-ஐ கடந்துள்ள நிலையில், தனது 10 வருடங்களை சிறையில் கழித்து விட்டார்.
இந்நிலையில், கன்னா பகுதியை சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, துருவ் தனது திருமணத்திற்காக பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இவர் இதை வைத்து தப்பிக்க முயல்கிறார் என்று இவருக்கு பரோல் வழங்குவதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து, 2016-ம் ஆண்டு பாவந்தீப் கவுர் துருவின் புகைப்படத்தை வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், துருவ் மீண்டும் பரோல் கேட்டு முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறை வளாகத்திலேயே திருமணம் செய்துகொள்ள 6 மணிநேரம் அனுமாகி கொடுத்துள்ளது. மேலும், இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறையில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இவரை அங்கிருந்த போலீசார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர். 6 மணி நேரத்திற்கு பின் துருவ், மனைவியை பிரிய முடியாமல், மிகுந்த கவலையுடன் சிறைக்கு திரும்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்