கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!
வக்பு சட்டத் திருத்த மசோதா. ஆதரவாக 128 எம்.பி.க்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்த நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், வக்பு (திருத்த) மசோதா 2025, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஏப்ரல் 4, 2025 அன்று அதிகாலை, சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா 128 எம்.பி.க்களின் ஆதரவு வாக்குகளுடனும், 95 எம்.பி.க்களின் எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேறியது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 3, 2025 அதிகாலை 288 ஆதரவுகள் 232 எதிர்ப்பு வாக்குகளுடன் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இப்போது மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக இந்த மசோதா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், அதன் பிறகு சட்டமாக மாறும்.
எதிர்க்கட்சிகள் இதனை “முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சி” என்றும் “அரசியலமைப்புக்கு எதிரானது” என்று விமர்சித்து உடனடியாக இதனை ரத்து செய்யவேண்டும் என்பது போல கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். திமுக, காங்கிரஸ், BJD, YSRCP போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், NDA-வின் பெரும்பான்மை ஆதரவால் இது நிறைவேறியது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!
April 4, 2025