விவசாயிகளின் நீதிக்கான குரல் பாஜக அரசால் ஒடுக்கப்படுகிறது – பிரியங்கா காந்தி
விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். நீதியின் குரலை எப்போதும் அடக்க விடமாட்டோம் என பிரியங்கா காந்தி ட்வீட்.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்தரபிரதேச அரசு முதலில் அனுமதி மறுத்தது. பின், லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்,பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கியது. மேலும், அவர்களுடன் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரியங்கா காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விவசாயிகளின் நீதிக்கான குரல் பாஜக அரசால் ஒடுக்கப்படுகிறது; விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். நீதியின் குரலை எப்போதும் அடக்க விடமாட்டோம்.’ என பதிவிட்டுள்ளார்.
किसानों को कुचलने वाले खुलेआम घूम रहे हैं।
किसानों के लिए न्याय की आवाजों को भाजपा सरकार कैद कर रही है।
लेकिन हम न्याय की आवाज दबने नहीं देंगे। pic.twitter.com/1ZH40PMks9
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 6, 2021