விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது – ராகுல் காந்தி ட்வீட்.!

Default Image

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் ராகுல் காந்தி. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது, விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் கூறப்படுகிறது. பின்னர் தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை வீரர்கள் தொழிற்சாலை சுற்றியுள்ள கிராமத்து மக்களை மீட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தி பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுபோன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student