இறந்த கொரோனா நோயாளியின் உடலில் இருந்து வைரஸ் பரவ வாய்ப்பில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு!

Default Image

உயிரிழந்த கொரோனா நோயாளியின் உடலில் இருந்து 12- 24 மணி நேரத்துக்கு பின்பதாக மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவில் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலில் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பது தொடர்பாக இதுவரை ஆதாரப்பூர்வமான எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே சந்தேகத்திலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இது பற்றிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் தடவியல் துறை தலைவர் டாக்டர் சுதீர் குப்தா அவர்கள், கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸால் பலியானவர்களின் உடல்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தியதாகவும் கிட்டத்தட்ட 100 உடல்களை வைத்து உயிர் பிரிந்த 12 முதல் 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12-24 மணி நேரத்துக்குப் பின்பதாக ஒருவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் போன்ற துவாரங்கள் வழியாக கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாம்.

இருப்பினும், கொரோனாவால் உயிரிழக்க கூடியவர்களது உடல்களில் மூக்கு மற்றும் வாய் போன்ற துவாரங்கள் உடல் திரவங்கள் வெளிவருவதை தடுக்கும் விதமாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், இதை செய்யக் கூடியவர்கள் முறையான பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முகக்கவசம் கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன்,  தகனம் செய்த பின்பு  உயிரிழந்தவர்களின் எலும்பு மற்றும் அஸ்தியை கூட சேகரிக்கலாம் இது பாதுகாப்பானது தான், இதன் மூலம் தொற்றுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis
Vidamuyarchi Online Review
gold price