இயந்திரங்கள் இல்லாமல் கையாலேயே வீட்டை மொத்தமாக தூக்கிய கிராம மக்கள்!
இயந்திரங்களின் உதவியில்லாமல் நாகலந்தின் மக்கள் சிலர் வீடு ஒன்றை அப்படியே தூக்கி இடம் மாற்றியுள்ளனர்.
தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் மக்கள் தங்களின் வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளும் அளவுக்கு அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. முன்பெல்லாம், வீடுகள் ஒரு இடத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதை இடித்துவிட்டு வேறொரு இடத்தில கட்டுவது தான் வழக்கம், ஆனால் தற்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் சிலர் வீட்டை அப்படியே நகர்த்துவதை பார்த்திருப்போம், கேள்வி பட்டிருப்போம்.
ஆனால், நாகலாந்து மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் சிலர் ஒரு வீட்டை சில மரக்கட்டைகள் உதவியுடன் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் இணைந்து நகர்த்தியுள்ளனர். நாகலாந்து மாநிலத்தில் உள்ள லாங்க்வின் எனும் மாவட்டத்தின் அமைந்துள்ள யாக்சின் எனும் கிராமத்தில் உள்ள வீட்டை தான் இவ்வாறு நகர்த்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று அங்குள்ள வனத்துறை அதிகாரியால் இணையத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து இந்த வீடியோ மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.