உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பென் வசித்து வந்த கிராமம் சீல்வைக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்.,முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,பிரியங்க ஆகியோர் போலீசாரால் தடுத்தி நிறுத்தப்பட்டனர்.
தடுப்பை மீறி ராகுல் செல்ல முயன்ற போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் ராகுலை புதரில் போலீசார் தள்ளி தாக்கியதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி செல்ல முயன்றதாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தடையை மீறியதாக ராகுல் காந்தி,பிரியங்கா உள்ளிட்ட 200 பேர் மீது போலீசார் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்க அக்கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டு 144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அதில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…