வீடியோ வைரல்…முதியவரை உதைத்த போலீஸ்காரர்- கடுமையான நடவடிக்கை வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வலியுறுத்தல்!

உ.பி:போலீஸ்காரர் ஒருவர் கூப்பிய கைகளுடன் நின்ற ஒரு முதியவரை உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதையடுத்து,அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே. விஜ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ்காரர் ஒருவர் கூப்பிய கைகளுடன் நின்ற ஒரு முதியவரை உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோவில்,முதியவர் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு பேசுவதைக் காணலாம், ஆனால்,அவரை உ.பி.காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உதைக்கிறார்.
மேலும்,முதியவரை ‘மனம் குன்றியவர்’ என வர்ணித்த காவல்துறையினர், ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு குற்றச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,முதியவரை அவர் அறைந்ததற்கான உண்மையான காரணம் குறித்த முறையான தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில்,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே. விஜ் என்பவர்,இந்த வீடியோவைப் பகிரும்போது முதியவரை உதைத்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும்,சில காவல்துறை சீர்திருத்தங்களுக்கு பணம் தேவையில்லை.மாறாக,முறையான பயிற்சி மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளால் மட்டுமே முன்னேற்றத்தை கொண்டு வர முடியும்” என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து,இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், உத்தரபிரதேச காவல்துறை தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
उत्तर प्रदेश की उत्तम पुलिस,
बुजुर्ग हाथ जोड़े खड़ा है, #साहब लात मार रहे हैं ????
वायरल वीडियो #बांदा का बताया जा रहा है,@dgpup @Uppolice @ipsvijrk pic.twitter.com/FEo8fboroW— Rohit Tripathi Journalist (@rohitt_tripathi) January 30, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025