எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு நவம்பர் 13-ம் தேதி..!
கொறடா உத்தரவை மீறியதாக கூறி ஜே.டி .எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த மாதம் இறுதியில் விசாரணை முடிந்த பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கின் தீர்ப்பு இந்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு வெளியாகவில்லை.எனவே இந்த வழக்கின் தீர்ப்பை வருகின்ற 13-ம் தேதி உச்சநீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.