உ.பி ஞானவாபி மசூதி விவகாரம்.! வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிமன்றம்.!
உ.பி ஞானவாபி மசூதி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய கோரிய மனுவை விசாரிக்க வாரணாசி நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
உத்திர பிரதேசத்தில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகதத்தின் வயதை கண்டறியும் நோக்கில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்பு தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வாராணாசி நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த மனு மீதான விளக்கத்தை மே 19ஆம் தேதிக்குள் ஞானவாபி மசூதி குழு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மசூதி தரப்பு விளக்கத்தை அடுத்து இந்த மனு அடுத்தகட்ட விசாரணையை தொடங்கும் என கூறப்படுகிறது.