வந்தே பாரத் மிஷன்…. 17 நாடுகளுக்கு சுமார் 170 விமானங்கள் இயக்கம்.!

Default Image

வெளிநாடுளில் சிக்கியுள்ள இந்தியர்களை  மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் 17 நாடுகளுக்கு சுமார் 170 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது, இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் அச்சத்தில் உள்ளார்கள், மேலும் சில மக்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரமுடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள்.

மேலும் இந்நிலையில்  இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கி இருக்கும்  இந்திய மக்களை மீட்பதை கருத்தில் கொண்டுவந்தே பாரத் மிஷன் மூலம் கடந்த மே மாதம் முதல் மூன்று கட்டங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும் இதனால் 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த மே மாதம் முதல் தாயகம் திரும்பியுள்ளார்கள்.

இந்நிலையில் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியது, 17 நாடுகளில் 4 ஆவது கட்டமாக சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர வருகின்ற ஜூலை மாதம்  3 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை 170 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 26 விமானங்கள் சவுதி அரேபியாவிற்கும், 38 விமானங்கள் இங்கிலாந்திற்கும், 32 விமானங்கள் அமெரிக்காவிற்கும்,இயக்கப்படவுள்ளது.

அந்த 17 நாடுகள் பங்களாதேஷ், மற்றும் சவுதி அரேபியா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், அமெரிக்கா, உக்ரைன் மற்றும் வியட்நாம், ஜப்பான், போன்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பயன்பெருவார்கள் என்றும் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்