தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர்..!

Default Image

கர்நாடகாவில் தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர்

இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நாளுக்கு நாள் சாதி, மதவெறி மோதல்கள் ஏதோ ஒரு மூலையில் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரில் தலிப் பெண்ணொருவர் சாதிய ரீதியாக அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நவம்பர் 18ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் சாதியினர் என்று அழைக்கப்படும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்துள்ளார்.

இதனை பார்த்த ஒருவர் தொட்டியில் தண்ணீர் குடித்ததற்காக  அந்த பெண்ணை திட்டியுள்ளார். இதனால் அப்பெண் அவ்விடத்தில் இருந்து வேகமாக சென்று விட்டார். பின்னர் அப்பெண்,  தண்ணீர் அருந்திய தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு அந்த தொட்டியை கோமியத்தால் கழுவி உள்ளனர்.

இதனை எடுத்து, பாதிக்கப்பட்ட அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகள் வலுத்து வந்தது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு சாம்ராஜ்நகர் தாசில்தார் பசவராஜ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்