விசாரணை கைதியை ஷாப்பிங் அழைத்து சென்ற உ.பி போலீசார்.! எஸ்.ஐ மற்றும் 3 கான்ஸ்டபிள் உடனடி சஸ்பெண்ட்.!
உ.பியில் விசாரணை கைதியை மருத்துவமனை அழைத்து செல்லும் போது வழியில் அவரை ஷாப்பிங் மால் கூட்டி சென்றதால் எஸ்ஐ மற்றும் 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ரிஷப் ராய் என்பவர் ஆயுதச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு லக்னோ போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் அனுமதி :
இந்நிலையில், றிஷப் ராய் சில உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அளித்த மனுவின் பெயரில், கடந்த மார்ச் 7ஆம் தேதி அரசு மருத்துவமனைக்குச் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
மருத்துவமனை :
இதனை அடுத்து , எஸ்ஐ ராம்சேவக் மற்றும் கான்ஸ்டபிள்கள் அனுஜ் தாமா, நிதின் ராணா மற்றும் ராமச்சந்திர பிரஜாபதி ஆகியோர் கட்டுப்பாட்டில், ராய் மருத்துவமனை அழைத்து செல்லபட்டார்.
ஷாப்பிங் மால் :
அப்படி மருத்துவமனை கூட்டி சென்று திரும்பி வரும்போது, அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு காவலர் ஒருவர் ராயை அழைத்து சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட எஸ்ஐ ராம்சேவக் மற்றும் கான்ஸ்டபிள்கள் அனுஜ் தாமா, நிதின் ராணா மற்றும் ராமச்சந்திர பிரஜாபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
मेडिकल पर आए #बंदी को #मॉल घुमाते #पुलिसकर्मियों का #वीडियो हुआ #वायरल
मामले में एक #दारोगा और 3 #सिपाहियों को #निलंबित किया गया है
जिला #जेल से मेडिकल के लिए आया था #बंदी@lkopolice pic.twitter.com/iS98ggC5xj
— Goldy Srivastav (@GoldySrivastav) March 17, 2023