கொத்தவரங்காய் சத்தான உணவு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது.
1. கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
2. கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இது இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது.
4. இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
5. கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
6. சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. இதனால் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை தடுக்கப்படும்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…