ரத்து:-? 24 பல்கலைக்கழகங்கள் போலி…பல்கலை.மானியக்குழு அதிர்ச்சி ரீப்போட்!
நாட்டின் பல பகுதியில் உள்ள அங்கீகாரம் பெறாத 24 சுய சார்பு பல்கலைக்கழகங்கள் போலி என்று பல்கலைக்கழக மானியக்குழு அதிர்ச்சி ரீப்போட் அளித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள அங்கீகாரம் பெறாத 24 சுய சார்பு பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழங்களும் டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த போலி பல்கலைக் கழகங்களுக்கு எவ்வித பட்டமும் அளிக்க அனுமதி கிடையாது என்று தெரிவித்து உள்ளார்.போலி என்று அறிவிக்கப்பட்ட 24 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடாமியின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.