உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தடைந்தார். இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, அண்டனி பிளிங்கன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமெரிக்கா, இந்தியா என இரு நாட்டின் உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து முக்கிய தலைவர்களை கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆண்டனி பிளிங்கன், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனாவின் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக மாண்புகளை பேணிக் காப்பதில் கடமை பற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அரசு முறை பயணமாக இந்திய வந்துள்ள ஆண்டனி பிளிங்கன், இன்று மாலை பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பின்னர் பிளிங்கனின் இந்தியாவுக்கான முதல் பயணம் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் ஜோபைடன் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவுக்கு வரும் அமெரிக்காவின் 3வது உயர்மட்ட தலைவராக இவர் இருப்பார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…