லடாக் விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இந்தியாவுக்கே… வெள்ளை மாளிகை அறிவிப்பு…
இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா அளித்து வரும் பிரச்னையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா- சீனா இடையே நீடித்து வரும் பதற்றத்தில் அமெரிக்காவின் நிலைபாடு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை அதிகாரி, இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கான முழுமையான ஆதரவை டிரம்ப் நிர்வாகம் வழங்கும். எல்லை பிரச்னை மட்டுமின்றி இந்தியாவுடன் அனைத்து விஷயங்களிலும் கைகோர்த்து நட்புடன் செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. இந்தியா – சீனா இடையேயான பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சிக்கல்களைப் புரிந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும், சிக்கல்கள் பெரிதாவதை அமெரிக்கா தவிர்க்கவே நினைக்கிறது. பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ள விரும்புகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.