34 நாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.! மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்.!   

Union Minister V Muralidharan

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் துறை சார்ந்த தரவுகளையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் முக்கிய தரவு விவரங்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில் கடந்த 2018 முதல் தற்போது வரை 403 பேர் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவலை கூறினார். மொத்தம் 34 நாடுகளில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.! 

கனடாவில் 2018 முதல் 91 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததே அதிக எண்ணிக்கை கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 48 உயிரிழப்புகளும், ரஷ்யாவில் 40 உயிரிழப்புகளும், அமெரிக்காவில் 36 உயிரிழப்புகளும், ஆஸ்திரேலியாவில் 35 உயிரிழப்புகளும், உக்ரைனில் 21 உயிரிழப்புகளும், ஜெர்மனியில் 20 உயிரிழப்புகளும், சைப்ரஸில் 14 உயிரிழப்புகளும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இது குறித்து மத்திய இணையமைச்சர் வி.முரளிதரன் மாநிலங்களவையில் கூறுகையில், வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும். வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அதனை முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு  தண்டனை பெற்று தருவதை இந்திய அரசு உறுதிசெய்கிறது. வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் பிரச்சனை குறித்து உடனடியாக சம்மந்தப்பட்ட அந்நாட்டு அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது என்றும் மத்திய இணையமைச்சர் கூறினார்.

வெளிநாட்டில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அவசர மருத்துவ உதவி, தங்கும் வசதி மற்றும் தேவைப்படும் போது தங்கும் வசதி உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளுக்கு இந்திய தூதரக எப்போதும் உதவும் எனவும் மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் வி.முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்