ஒடிசா ரயில் விபத்து : சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை.! மத்திய அமைச்சர் தகவல்.!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாயவையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் இதுவரை 277 பேர் உயிரிழந்ததாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வேத்துறை சார்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.