தனியார் அதிகாரத்தில் ஆதார் தகவல்கள்.? மத்திய அரசு புதிய பரிந்துரை.!
ஆதார் அடையாளங்களை சரிபார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
ஆதார் எண் என்பது இந்திய குடிமகனின் தனிமனித அடையாள எண் ஆகும். இந்த அடையாள எண் தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதில் ஏதேனும் திருத்தும் கொண்டு வருவதற்க்கோ ஆவணங்கள் சரிபார்த்ப்பதற்கோ ஆதார் தளத்தையோ, அல்லது ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். இதனை எளிதாக்க தற்போது மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வரவுள்ளது.
அதன்படி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது நேற்று (வியாழன்) அன்று அரசு அலுவலகங்கள் தவிர பிற தனியார் நிறுவனங்களால் ஆதார் எண்ணை சரிபார்க்கும் அதிகாரத்தை செயல்படுத்துவதற்கான விதிகளை நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை மீதான திருத்தங்கள் மற்றும் கருத்துக்களை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுள்ளது. ஆதார் அடையாளத்தை சார்பார்க்கவும், மக்களுக்கு இன்னும் எளிதாக மாற்றுவதற்கும், குடிமக்கள் எளிதாக பயன்படுத்தவும் இந்த அணுகுமுறை உறுதியளிக்கும் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறுகிறது.
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தனியுரிமையானது பரிந்துரைக்கப்பட்ட நோக்கத்திற்காக தனியார் நிறுவனங்கள் ஆதாரை சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட்டால் அது மக்களிடம் ஆதார் செயல்பாட்டை இன்னும் எளிதாக்கும் என கூறப்படுகிறது.