ஜம்மு – காஷ்மீருக்கான இருப்பிட சட்ட அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜம்மு-காஷ்மீரில், 15 ஆண்டுகள் தங்கி இருந்தவர்கள் அல்லது 7 ஆண்டுகள் தங்கி, 10 அல்லது 12 வகுப்பு தேர்வு எழுதியவர்கள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர் என்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், ஜம்மு – காஷ்மீரில் குறைந்தது, 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்களின் குழந்தைகள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்களின் குழந்தைகள், தொழில் அல்லது கல்வி காரணமாக வேறு மாநிலங்களில் வசித்தாலும் அவர்கள் பெற்றோர் விரும்பினால், அவர்களுக்கு யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இவர்கள் ஜம்மு – காஷ்மீர் அரசு பணிகளில் சேர தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு பணிகளில் ‘குரூப் – 4’ வரை இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்களுக்கே கிடைக்கும் வகையில், இடஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அரசு, நேற்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி…
சென்னை : நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ' டிராகன் ' திரைப்படம் இறுதியாக இன்றைய தினம் திரையரங்கில்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின்…
சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி…
டெல்லி : மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற செய்துள்ளனர்.…