ஜம்மு – காஷ்மீருக்கான இருப்பிட சட்டத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.!

ஜம்மு – காஷ்மீருக்கான இருப்பிட சட்ட அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜம்மு-காஷ்மீரில், 15 ஆண்டுகள் தங்கி இருந்தவர்கள் அல்லது 7 ஆண்டுகள் தங்கி, 10 அல்லது 12 வகுப்பு தேர்வு எழுதியவர்கள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர் என்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், ஜம்மு – காஷ்மீரில் குறைந்தது, 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்களின் குழந்தைகள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்களின் குழந்தைகள், தொழில் அல்லது கல்வி காரணமாக வேறு மாநிலங்களில் வசித்தாலும் அவர்கள் பெற்றோர் விரும்பினால், அவர்களுக்கு யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இவர்கள் ஜம்மு – காஷ்மீர் அரசு பணிகளில் சேர தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு பணிகளில் ‘குரூப் – 4’ வரை இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்களுக்கே கிடைக்கும் வகையில், இடஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அரசு, நேற்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு!
February 19, 2025
PAKvNZ : முடிஞ்சா தொட்டுப்பார்! பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு! மிரட்டிய நியூசிலாந்து!
February 19, 2025
IND vs BAN : இந்தியா vs வங்கதேசம் மேட்ச் எப்படி இருக்கும்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட் இதோ…
February 19, 2025
மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு! பாபர் அசாமை ஓரங்கட்டிய ‘No.1’ கில்!
February 19, 2025