Categories: இந்தியா

சிஆர்பிஎப் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! 13 மொழிகளில் தேர்வு எழுதலாம்.! உள்துறை அமைச்சகம் சூப்பர் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

சிஆர்பிஎப் தேர்வு எழுதுவோர் தற்போது 13 பிராந்திய மொழிகளில் தங்கள் தேர்வுகளை எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துளளது.  

மத்திய உள்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் பாதுப்பு படையான சிஆர்பிஎஃப் (CRBF) படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பமானது, கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 25ஆம் தேதி இறுதிநாள் என விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்கள் கோரிக்கை :

சிஆர்பிஎப் படையில் மொத்தமுள்ள 9,212 காலிப்பணி இடங்களில், 579 பணியிடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும், இந்த சிஆர்பிஎப் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுதி இருந்தார்.

தமிழக முதல்வர் கடிதம் :

முதல்வர் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய் மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என கூறி அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார்.

வரலாற்று சிறப்புமிக்க முடிவு :

தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஓர் முக்கிய மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிஆர்பிஎப் தேர்வு எழுதும் தேர்வர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது 13 மாநில பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சியால், உள்ளூர் இளைஞர்கள் துணை ராணுவப்படையில் இடம்பெறுவதற்கும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிபிடித்தபட்டுள்ளது.

13 மொழிகள் :

இந்த தேர்வானது, ஆங்கிலம்,, இந்தி உட்பட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, ஓடிஸ், உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் இந்த தேர்வானது ஜனவரி 1,2024 முதல் நடைபெறும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

1 minute ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

9 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

9 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

11 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

11 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

12 hours ago