மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை..! – ப.சிதம்பரம்
- மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனை விமர்சித்த ப.சிதம்பரம்.
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவது குறித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், அமைச்சர் ஹர்ஷ்வர்தனை விமர்சிக்கும் வண்ணம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன்-2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டு்ள்ளது. மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?’ என பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம்
‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?
— P. Chidambaram (@PChidambaram_IN) June 9, 2021