சிகெரெட் மீதான சுங்க வரியை 16 சதவீதம் உயர்த்தி மத்திய நிதியமைச்சார் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று 2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் , ஆரம்பத்தில் மத்திய அரசால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்து 2023- 2024க்கான பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.
ஏற்கனவே சில முக்கிய திட்டங்களான, ரயில்வே , நர்சிங் கல்லூரிகள், வறட்சியை சமாளிக்க கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி, விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம், நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.75,000 கோடி, சிறு குறு , நடுத்தர தொழில்கள் தொடங்க, அவற்றை மேம்படுத்த கடன் உதவி அளிக்கப்படும் வகையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, வருமான வரி உச்சவரம்பு உயர்வு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல , தற்போது சிகெரட் மீதான சுங்க வரியை 16 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சுங்க வரி உயர்த்தப்பட்டதால் சிகெரெட் விற்பனை விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சுங்க வரி உயர்த்தப்பட்டதான் காரணமாக பங்குசந்தையில் சிகெரெட் தயாரிப்பை கொண்டுள்ள ஐடிசி, காட்ஃப்ரே பிலிப்ஸ், விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் என்டிசி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்துள்ளன.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…