விரைவில் மழைக்கால கூட்டத்தொடர்… இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.!

PM Modi

இன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 

இந்தாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் துவங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைய உள்ளது. நாடாளுமன்ற் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க பல்வேறு கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூடும் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்