உத்தரகண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்.! 

UCC Bill passed in Uttarkhand

உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் இன்று மிக முக்கிய நிகழ்வாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் உத்தரகாண்ட் சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யபட்டது. இதனால் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த சட்ட மசோதா மீது நேற்று முதல் இன்று வரை விரிவான விவாதம் நடைபெற்றது.

இந்த சட்ட மசோதா பற்றி உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், இது ஒரு சாதாரண மசோதா அல்ல. இந்தியா ஒரு பரந்த மிகப்பெரிய தேசம். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் முன்னேற்றத்தினை நாட்டின் முன்னேற்றமாக மாற்றும் வாய்ப்புகளை இந்த நாடு வழங்குகிறது. அதேபோல, ஒரு வரலாற்றை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை இந்த நாடு நமக்கு வழங்குகிறது. அந்த வாய்ப்பு தற்போது நமது மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. நாம் வகுத்துள்ள இந்த பாதையில் மற்ற மாநிலங்களும் பயணிக்க வேண்டியது சூழ்நிலை உருவாகும் என்றும் கூறினார்.

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது – பிரதமர் மோடி.!

மேலும், இந்த பொது சிவில் சட்டத்தின் மூலம் திருமணம், வாரிசு உரிமை , விவாகரத்து . லிவிங் டு கெதர் போன்ற அனைத்து விஷயங்களிலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி அனைத்து நபர்களும் சரி சமம் என்கிற சமத்துவத்தை உறுதி செய்கிறது. இந்த மசோதா பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை சரி செய்தும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை அகற்றுவதற்கு ஒரு முக்கிய அங்கமாகவும் செயல்படும். மாற்று சக்திகளுக்கு எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகள் மகள்களுக்கு எதிரான பாகுபாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தொகையில் பாதி பேர் சம உரிமை பெற வேண்டும் என்றும் முதல்வர் தாமு சட்டமன்றத்தில் கூறினார்.

முதல்வர் உரையை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதிகபட்ச உறுப்பினர்களின் ஆதரவுடன் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது . இதனை அடுத்து இந்த பொது சிவில் சட்டம் ஆளுநர் ஒப்புதல் பெற்று குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அந்த சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும்.

இந்த மசாலாவை தாக்கல் செய்த அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் கூறுகையில், இந்த பொது சிவில் சட்டத்திற்கு 72 கட்டங்களாக பரிந்துரைகள் பெறப்பட்டது. இதில் மின்னஞ்சல்கள், வாட்சாப் மூலமாக சுமார் 2,72,000க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றன. இந்த மசோதாவுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் பலர் ஆதரவு கொடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் சட்டத்தின் மூலம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக கருதப்படும். லிவிங் டு கெதர் வாழ்வில் ஈடுபட திருமணமாணவர்களுக்கு தடை விதிக்கப்படும். 21 வயதுக்கு உட்பட்ட நபர்கள் லிவிங் டு கெதர் வாழ்வில் ஈடுபட பெற்றோர் சம்மதம் வேண்டும் இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் பொது சிவில் சட்டத்திருத்தத்தில் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்