தொடர் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு மரண தண்டனை.
மேற்கு வங்கம் மாநிலத்தில் வசித்து வருபவர், கம்ருஸ்மான் சர்க்கார் (38). இவர் அந்த மாநிலத்தில் தொடர்ந்து தொடர் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் இதுவரை 9 பெண்களை கொலை செய்துள்ளார். மேலும், இதில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் காவல்துறையினரின் கைவசம் சிக்கியுள்ளார். கிழக்கு பர்த்வான் மற்றும் ஹூக்லி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இதுவரை இவர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச் சம்பவங்கள் 2013 முதல் 2019ம் ஆண்டிற்குள் நடந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பொதுவாக, ஆண்கள் வேலைக்கு சென்ற பின், அந்த பெண்களை குறிவைத்து கொலை செய்வது மட்டுமல்லாமல், சில சமயங்களில் மின்வாரிய அதிகாரி போல் வீடுகளுக்குள் நுழைந்து உலோக சங்கிலியால் பெண்களின் கழுத்தை நெரித்து கொலை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
கிழக்கு பர்த்வான் மாவட்ட நீதிமன்றத்தில், இந்தக்கொலை சம்பவங்கள் தொடர்பான வழக்கு, நடந்து வந்த நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை குறித்து தெரிவித்துள்ள நீதிமன்றம், அவர் கொடூரமான செயல்களில் ஈடுபட்டதாகவும், அதனால் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…