மனைவியை கோடாரியால் வெட்டி கொன்று, 80 மீட்டர் தூரம் வரை தெருவில் இழுத்து சென்ற கொடூரன்.
ராஜஸ்தானில் கோடா பகுதியில் பிந்து என்பவர் அவரது மனைவியான சீமாவை கோடாரியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்த நிலையில், பிந்து உயிரிழந்த மனைவியை சுமார் 70 முதல் 80 மீட்டர் தூரத்திற்கு தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். அவரது செயலைக் கண்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்த போது மனைவியின் சடலத்தை அதே இடத்திலேயே விட்டு விட்டு சென்றுள்ளார். மேலும் இவரின் தாக்குதலில் அவரது 9 மாத மகனும் காயமடைந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிந்து முதலில் தப்பியோடி நிலையில் பின்னர் காவல்துறையில் சரணடைந்தார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ராம்கல்யன் கூறுகையில், பிந்து தனது மனைவியை கோடாரியால் கொலை செய்து சுமார் 70 முதல் 80 மீட்டர் தூரத்துக்கு தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். மக்கள் அதனை பார்த்தவுடன் அவரை அதை எடுத்து நெய் விட்டு விட்டு சென்றுள்ளார.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிய வந்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த தம்பதியரின் மகன் அவினாஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலைக்கான காரணம் என்பது என்ன குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முதற்கட்ட விசாரணையில் தம்பதியினர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் கடந்த சில ஆண்டுகளாக இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், சீமா கொலை நடந்த அன்று பிற்பகல் அந்த சகோதரன் வீட்டில் இருந்துள்ளார். அவரது கணவர் அங்கு சென்று சீமாவையும், மகனையும் பாட்டபாடாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், இரட்டைக் கொலைக்காக பிந்து கைது செய்யப்பட்டார். குற்றம்சாட்டபட்டவர் மீது கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட ஐந்து கிரிமினல் வழக்குகள் உள்ளன என கோடா நகர எஸ்.பி. விகாஸ் பதக் கூறியுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …