தெலுங்கானாவில் தான் செய்த கொலையை மறைக்க தூக்க மாத்திரை கொடுத்து 9 பேரை கொலை செய்த கொடூரன் கைது.
தற்பொழுதெல்லாம் கொலை செய்ய கொடிய கொலைகாரர்கள் செய்த தவறை மறைக்க வேறு இடங்களுக்கு ஓடுவது வழக்கம், சிலர் பயந்து சரணடைவது வழக்கம். ஆனால் இங்கு அப்படி அல்ல, வித்தியாசமான முறையில் ஒன்று நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் கொர்ரா குண்டா எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய நிஷா மற்றும் அவரது கணவர் மக்ஸூத்தின் பழக்கமான நண்பர் தான் சஞ்சீவ்குமார். நிஷாவின் சகோதரி ரஃபீகா என்பவர் கணவரை விட்டு மூன்று குழந்தைகளுடன் பிரிந்து வந்து நிஷாவின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இதனால் ராஃபீகாவுக்கும் சஞ்சீவ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சஞ்சீவ் ரஃபீகாவின் 12 வயது மகளிடம் ஒரு முறை தவறாக நடக்க முயன்றதால் போலீசில் புகார் அளித்து விடுவேன் என எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சஞ்சீவ் கடந்த மார்ச் மாதம் ரஃபீகாவை விசாகப்பட்டினம் செல்ல ரயிலில் அழைத்து சென்று குடிக்க வைத்திருந்த மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த பின் வீட்டிற்கு வந்து அவர் பீகார் சென்றுள்ளதாக சாதாரணமாக கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரியை காணவில்லை என தேடி சஞ்சீவ் மீதும் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளிப்பேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக கொல்ல சஞ்சீவ் திட்டமிட்டுள்ளார். எனவே கடந்த மே மாதம் நிஷாவின் மூத்த மகன் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட நிஷா அவரது கணவர் அவரின் மகள் மற்றும் இரண்டு மகன்கள் அண்டை வீட்டுக்காரர்கள் என மொத்தம் ஒன்பது பேர் சேர்த்து அனைவருக்கும் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சாப்பிட்ட உணவில் தூக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை உண்டு அனைவரும் மயங்கிடவே இரவு 12 மணி அளவில் ஆரம்பித்து காலை 4 மணி வரை அவர்களின் வீட்டு பின்புறம் இருந்து விவசாய கிணற்றில் ஒவ்வொருவரையாக வீசியுள்ளார் சஞ்சீவ்.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 9 சடலங்கள் விவசாய கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அவ்விடத்தை பரபரப்பாகியுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையில் தெளிவாக சிசிடிவி கேமரா மூலம் சஞ்சீவ் சிக்கியதை அடுத்து இந்த வழக்கு வாரங்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று உள்ளது. மேலும் சஞ்சீவ் கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.