உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் தேர்தல் வாக்குபதிவு நிலவரம்…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வரானதால், அவர் எம்.பி.யாக இருந்த அத்தொகுதி காலியானது. புல்பூர் தொகுதி எம்.பி மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது. இதேபோல, பீகாரில் உள்ள அராரியா மக்களவை தொகுதியும் காலியாக இருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட மூன்று மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்களர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.தற்போதைய காலை 11 மணியளவில் வரை கோரக்பூர் தொகுதியில் 16.80% வாக்குகளும்,அதேபோல் புல்பூர் தொகுதியில் 12.20% வாக்குகளும் பதிவாகியுள்ளன.