போலீஸ் மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துத்தி எங்களை நீங்கள் கைது செய்தாலும் நீங்கள் எங்கள் குரலை நசுக்க முடியாது என ராகுல் காந்தி ட்வீட்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது போலீசார், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சர்வாதிகாரத்தைப் பாருங்கள். அமைதி வழிப் போராட்டம் நடத்த இயலவில்லை, பணவீக்கம் குறித்தோ, வேலை இல்லா திண்டாட்டம் குறித்தோ விவாதிக்க முடியவில்லை. போலீஸ் மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துத்தி எங்களை நீங்கள் கைது செய்தாலும் நீங்கள் எங்கள் குரலை நசுக்க முடியாது. உண்மை இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு எழுதியே தீரும்.’ என பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…