திருட்டு தனமாக மணலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களுடன் கவிழ்ந்த லாரி.!
மணலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடெர்மா மாவட்டத்தில் மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து. அதில், மண்ணிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மது பாட்டில்கள் நெல் வயலில் சரிந்ததாக காவல் துறையினர் இன்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சத்கன்வா காவல் நிலையப் பகுதியில் உள்ள பாரியார்பூர்-ஜான்ஜி மோர் அருகே நேற்று நடந்த இந்த விபத்து குறித்து தகவல் பரவியதால், மக்கள் அனைவரும் மது பாட்டில்களைக் தூக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக, வயலில் சரிந்த லறியள் வயலில் உள்ள பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரும் உதவியாளரும் விபத்து நடந்த உடனேயே தலைமறைவாகிவிட்டனர். இத்தனையடுத்து, இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.