நாய் வாயில் “டேப்”! கேரளாவில் மீண்டும் நடந்த பரிதாப சம்பவம்!

Default Image

சுமார் மூன்று வயதுடைய ஒரு நாய், திருச்சூரில் உள்ள மக்கள் நலன்புரி சேவைகள் (PAWS) உறுப்பினர்களால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்க ளுக்கு பின் அதன் வாயில் டேப்பைக் கட்டியிருப்பதைக் கண்டு மீட்கப்பட்டது.

திருச்சூரில் சுமார் மூன்று வயதுடைய ஒரு நாய் பசி வேதனையால் அங்கும் இங்கும் சுற்றித்திருந்தது. மேலும் ஒல்லூர் சந்திப்பில்(PAWS) உறுப்பினர்களால் அந்த நாய் கண்டு பிடிக்கப்பட்டு, அந்த நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த நாயை மீட்கும் பொழுது வாயில் டேப் கட்டப்பட்டிருந்தது .

மேலும் அந்த டேப் ஒரு மடங்கு சுற்றப்பட்டிருந்தது என்று நங்கள் நினைத்தோம் ஆனால் அந்த டேப்  பல மடங்கு சுத்தப் பட்டிருந்தது, மிகவும் இறுக்கமாக கட்டப்பட்டு காய மடைந் திருந்து மூக்கை சுற்றி எலும்புகள் தெரிந்தது என்றும் , நாங்கள் டேப்பை அகற்றியவுடன், நாய் இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்தது, என்று  திருச்சூர் (PAWS) இன் செயலாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

இந்த நிலையில் (PAWS) இன் செயலாளர் ராமச்சந்திரன் கூறுகையில்  நாய்கள் உணவு இல்லாமல் சில வாரங்கள் உயிர்வாழ முடியும். ஆனால் அவை குறிப்பிடத்தக்க வகையில் பலவீனமடைந்து விடும், மேலும் இந்த நாய்க்கு நுண்ணுயிர் எதிர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது விரைவில் குணமாகிவிடும் என்றும் கூறப்டுகிறது. நாங்கள் போலீஸ் புகார் அளிப்போம், ”என்று ராமச்சந்திரன் மேலும் கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்