ஐஸ்கிரீமுடன் தங்க நகைகளை விழுங்கிய திருடன்…! மருத்துவ பரிசோதனையில் வசமாக சிக்கிய திருடன்…!
போலீசாரிடமிருந்து மறைக்க ஐஸ்கிரீமுடன் ஆபரணங்களை விழுங்கிய திருடன்.
இன்று திருடர்கள் பலரும் வித்தியாசமான முறையில் திருடுகின்றனர். அந்த வகையில், கர்நாடகாவில், தட்சினா கன்னட மாவட்டம் சுல்லியாவில், திருடன் ஒருவன் வினோதமான முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், ஷிபு என்பவர், ஞாயிற்றுக்கிழமை நகைக் கடைகளில் இருந்து திருடிய நகைகளை விழுங்கியுள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கின் செய்து பார்த்துள்ளனர். அந்த ஸ்கெனில், அவரது குடலில் நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதில் அவரது வயிற்றில் இருந்து, மோதிரங்கள் மற்றும் 35 கிராம் எடையுள்ள ஸ்டட்டுக்களை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ஷிபு போலீசாரிடமிருந்து மறைக்க ஐஸ்கிரீமுடன் ஆபரணங்களை விழுங்கியதாக ஒப்புக்கொண்டார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார் என கூறப்படுகிறது.