பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களின் வளர்ந்தவர்கள் – அமைச்சர் உஷா தாக்கூர்

நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள்.
மத்தியபிரதேச மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள். எல்லா மதத்தை சார்ந்த மாணவர்களுக்கும் கூட்டாக ஒரே கல்வி வழங்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன் என்றும், அசாம் மாநிலம் இதை செய்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மதத்தை அடிப்படையாக கொண்ட கல்வி, வெறித்தனத்தை அதிகரித்து, வெறுப்பை பரப்புகிறது என்றும், நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள் என்றும், ஜம்மு -காஷ்மீர் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றப்பட்டதற்கு காரணம் இதுதான் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மதக்கல்வியை விரும்புவோர், அதனை தங்கள் சொந்த செலவில் பெறலாம் என்றும், மதராஸாக்களுக்கான அரசாங்கத்தின் நிதி நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025