இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி – அரசு அனுமதி…!

Default Image

இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகம் செய்ய டன்சோ நிறுவனத்திற்கு தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஹைப்பர்லோகல் டெலிவரி தளமான டன்சோ நிறுவனம்,கடந்த 2014 இல் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை எட்டு நகரங்களில் வான் சேவையை வழங்குகிறது.அதாவது,மருந்துகள்,மளிகை மற்றும் உணவு போன்ற தயாரிப்புகளை மக்களுக்கு உடனடியாக வழங்கி வருகிறது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான சோதனை அடிப்படையில்,ட்ரோன்களைப் பயன்படுத்த டன்சோ நிறுவனத்தின், “ஸ்கை ப்ராஜெக்ட் மூலம் மருந்து” என்ற திட்டத்திற்கு அனுமதியளித்து,அந்நிறுவனத்துடன் தெலுங்கானா அரசாங்கம் இணைந்துள்ளது.

முன்னதாக,கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக ஆளில்லா ட்ரோன்களை,காட்சிகள் பார்வைக்கு (பி.வி.எல்.ஓ.எஸ்) அப்பால் சோதனை செய்ய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் தெலுங்கானாவுக்கு கடந்த ஆண்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும்,உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால்,ட்ரோன் விநியோகம் எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது குறித்து,டன்சோ டிஜிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் கபீர் பிஸ்வாஸ் கூறுகையில்,

“மருத்துவ அத்தியாவசியங்களுக்கான அவசர தேவையை பூர்த்தி செய்ய,ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் எங்கு வாழ்ந்தாலும்,உயிர் காக்கும் அத்தியாவசியங்கள் அவற்றை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.மேலும்,இந்த திட்டத்தில் நாங்கள் பங்கேற்பதன் மூலம்,எதிர்காலத்தில் இந்தியாவில் மருந்துகள், தடுப்பூசிகள், உணவு மற்றும் பிற பொருட்களை மக்கள் உடனடியாக பெரும் வகையில் கொண்டு செல்ல பயனுள்ளதாக இருக்கும்”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்