‘உங்களையெல்லாம் பார்க்க வேண்டும்’ இறப்பதற்கு முன் மாணவர்களிடம் கூறிய ஆசிரியர்..!
கேரளாவில் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது மாணவர்களை கேமராவை ஆன் செய்யச் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரையும் கடைசியாக ஒரு முறை பார்த்தார்.
கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு நலன்புரி கீழ்நிலைப் பள்ளியில் 47 வயதான மாதவி என்ற 3 ஆம் வகுப்பு கணித ஆசிரியை உள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டடு இருமல் தொடங்கியது. இதனால், மாதவி மாணவிக்கு எடுத்து வந்த ஆன்லைன் வகுப்பை கட் செய்து கணவர் மறைவுக்குப் பிறகு தனியாக இருந்த மாதவி தனது உறவினருக்கு போன் செய்துள்ளார்.
உறவினர் மாதவியின் வீட்டிற்கு வந்த போது, மயங்கிய நிலையில் இருந்த அவரைக் கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திடீர் மரணம் குறித்து மேலும் அறிய, பள்ளி நிர்வாகம் அவரது கடைசி வகுப்பின் காட்சிகளை பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதில், தனது மாணவர்களை கடைசியாக ஒரு முறை பார்க்க கேமராவை ஆன் செய்யச் சொல்லும் போது மாதவிக்கு நெஞ்சு வலி வருவதை வீடியோ காட்டுகிறது. பிறகு அவருக்கு அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாதவி இறந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மாதவியை பள்ளியில் அன்பான ஆசிரியையாக நினைவு கூர்ந்தனர்.