சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி நிறுத்தம்…மேகலாய அரசு தீடிர் முடிவு…!!
மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சுரங்கத்திற்குள் வேலை செய்து கொண்டு இருந்த 15 தொழிலாளர்கள் சிக்கிக் தவித்தனர்.மேகாலயா அரசும் தொழிலாளர்களை மீட்க்க தேசிய பேரிடர் மீட்புப் படை , போலீசார் உட்பட தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் ஒருமாதம் காலமாக நடைபெற்று வரும் மீட்புப் பணியால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதையடுத்து சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியை நிறுத்துவது வைப்பது குறித்து மேகாலயா அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவது மிக பெரும் சவாலாக இருப்பதாக மேகலாய மாநில முதலவர் தெரிவித்துள்ளார்.