ஜம்மு காஷ்மீரில் தால் ஏரியை அழகுப்படுத்தும் பணி தீவிரம்…!!
ஜம்மு காஷ்மீரில் தால் ஏரியை அழகுப்படுத்தும் பணி வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருவது தால் ஏரி. இந்த ஏரியில் படகுசவாரி செய்வதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தால் ஏரியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது சுற்றுலா பயணிகளை கவரும்வகையில், ஏரியை அழகுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கென ஏரியை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு, அதையொட்டி, அழகான வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தொழிலாளர்கள் மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுற்றுலா பயணிகள் மேலும் அதிகளவில் ஜம்மு காஷ்மீருக்கு வருவார்கள் என்று உள்ளூர் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.