சீரமைப்புப்பணிகள் புதன்கிழமை காலைக்குள் முடிக்க இலக்கு… அஷ்வினி வைஷ்ணவ்.!
புதன்கிழமை காலைக்குள் ரயில் சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்து ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் தகவல்.
ஒடிசாவில் பாலசோர் அருகே நேற்று முன்தினம் மூன்று ரயில் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் நிறைவடைந்து ரயில்களை சீரமைக்கும் பணிகள் நேற்றிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்ட பிறகு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், புதன்கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அவர் கூறியதாவது, பிரதமர் மோடி நேற்று விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார், நாங்கள் இன்று ரயில் தண்டவாளங்களை சரிசெய்து வருகிறோம். சம்பவ இடத்திலிருந்து அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன. கூடியவிரைவில் வரும் புதன்கிழமை காலைக்குள் சீரமைக்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம், சரிசெய்யப்பட்டுவிட்டால் இந்த தளங்கள் வழியே ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.