எல்லையில் பதற்றத்தை தனிக்க இன்று இந்தியா-சீனா 7வது சுற்று பேச்சு…

Published by
Kaliraj
இந்தியாவின் கிழக்கு லடாக்கில், கடந்த மே மாதம் சீன படைகள் இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீற துணிந்ததால், இந்திய-சீன படைகள் இடையே மோதல்பதற்றம் ஏற்பட்டது.இதன் விளைவாக போர் பதற்றம் கடந்த ஜூன் 15-ந் தேதி, சண்டை மூண்டது.
அதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலயில், கடந்த மாதம் 10-ந் தேதி, ரஸ்யாவின் மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், படைகளை விரைந்து விலக்கிக்கொள்வது உள்பட 5 அம்ச உடன்பாடு ஏற்பட்டது. கடந்த மாதம் 21-ந் தேதி, இரு நாடுகள் இடையே ராணுவரீதியிலான 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கூடுதலாக படைகளை அனுப்பக்கூடாது, நிலைமையை சிக்கலாக்கும் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை இரு நாடுகளும் வெளியிட்டன.
    இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) 7-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடக்கிறது. கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட சுசுல் என்ற இடத்தில் பகல் 12 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
     இந்திய தரப்புக்கு லே பகுதியை சேர்ந்த 14 படைப்பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குகிறார். லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் இடம் பெறுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கடந்த 9-ந் தேதி கூடி முடிவு செய்து விட்டது.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

32 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

51 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

1 hour ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

1 hour ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago