உத்தரபிரதேசம் : சுல்தான்பூரில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த எஸ்யூவி வாகனம் ஒன்று டிவைடரில் மோதி அந்தரத்தில் பறந்தது சென்று, எதிரே வந்த பைக்கில் பயணித்த தம்பதிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து நடந்ததை வீடியோ காட்டுகிறது.
இச்சம்பவம் ஜூன் 9ம் தேதி சுல்தான்பூரில் நடந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராணுவத்தில்நியமிக்கப்பட்ட மேஜர் மற்றும் அவரது மனைவி என அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோவை வைத்து பார்க்கையில், சாலையின் இடது புறமாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நடுவே இருந் டிவைடரில் மோதி ஒரு 4 அடி உயரத்திற்கு தூபறக்கிறது. அப்போது, அந்த சாலையின் மறுபக்கத்திலிருந்து வரும் டிவிஎஸ் அப்பாச்சி பைக் மீது, மோதி விபத்துக்குள்ளானது தெரிகிறது.
மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களின் புகைப்படங்களையும் வீடியோவில் காணலாம். விபத்தில் பைக் சிதைந்த நிலையில், ஸ்கார்பியோவுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதும், காவல் துறையினர் இறுதிச் சடங்குகள் செய்ததையும் வீடியோவில் காணலாம்.
சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…