டிவைடரில் மோதி அந்தரத்தில் பறந்த SUV கார்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!

car accitend

உத்தரபிரதேசம் : சுல்தான்பூரில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்த எஸ்யூவி வாகனம் ஒன்று டிவைடரில் மோதி அந்தரத்தில் பறந்தது சென்று, எதிரே வந்த பைக்கில் பயணித்த தம்பதிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து நடந்ததை வீடியோ காட்டுகிறது.

இச்சம்பவம் ஜூன் 9ம் தேதி சுல்தான்பூரில் நடந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராணுவத்தில்நியமிக்கப்பட்ட மேஜர் மற்றும் அவரது மனைவி என அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோவை வைத்து பார்க்கையில், சாலையின் இடது புறமாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நடுவே இருந் டிவைடரில் மோதி ஒரு 4 அடி உயரத்திற்கு தூபறக்கிறது. அப்போது, அந்த சாலையின் மறுபக்கத்திலிருந்து வரும் டிவிஎஸ் அப்பாச்சி பைக் மீது, மோதி விபத்துக்குள்ளானது தெரிகிறது.

மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களின் புகைப்படங்களையும் வீடியோவில் காணலாம். விபத்தில் பைக் சிதைந்த நிலையில், ஸ்கார்பியோவுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதும், காவல் துறையினர் இறுதிச் சடங்குகள் செய்ததையும் வீடியோவில் காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay