நூல் இழையில் உயிர் தப்பியவர்..!
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் மோதாமல் ஒருவர் நூல் இழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாஸ்திரி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மயூர் பட்டேல் என்பவர் ஒரு நடைமேடையில் இருந்து தண்டவாளத்தைக் கடந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்ல முயன்ற போது ரயில் புறப்பட்டுவிட்டது.
மயூர் பட்டேல் மீது ரயில் மோத இருந்த நிலையில் விரைவாக செயல்பட்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.
விசாரணையின் போது அடுத்த பிளாட்பாரத்துக்குச் செல்லும் வழி தனக்குத் தெரியாததால் தண்டவளத்தைக் கடந்ததாக மயூர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.