” காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு ” உச்சநீதிமன்றம் அதிரடி…!!
- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 CRPF வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
- இந்த கொடூர தாக்குதலால் வலதுசாரி அமைப்புகள் காஷ்மீர் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்ததையடுத்து வலதுசாரி அமைப்புகள் காஷ்மீர் மாநில மாணவர்களை தாக்கி வருகின்றனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்தவளைக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு மத்திய , மாநில அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் , இது குறித்த அறிக்கையை 4 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென்றும் கூறி நீதிபதிகள் தெரிவித்தனர்.