பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடா? – இன்று விசாரணை!

Published by
Edison

டெல்லி:பஞ்சாப்பில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம்  செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார்.

அப்போது,பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் நின்றது.இதைத்தொடந்து,பிரதமரின் வருகை,திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும்,முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும்,பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கிடையில்,உடனடியாக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச்சென்றார்.விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன்.உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பதிண்டா விமான நிலையத்தில் இருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகினது.இவ்வாறு,பிரதமர் சென்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து பஞ்சாப் அரசு மீது பாஜகவினர் கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து,பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்தது பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.இந்த உயர்மட்டக்குழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. வழக்கறிஞர் மணிந்தர் சிங்கின் மனுவை ஏற்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாத வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று மணிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,மனு குறித்த விவரங்களை பஞ்சாப் அரசுக்கு வழங்க மனுதாரர் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில்,பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறுகையில்:பிரதமரின் பாதுகாப்பில் எந்த வித பாதுகாப்பு குறைபாடு இல்லை என்றும்,பிரதமரிப் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில்,700 பேர்தான் நிகழ்சிக்கு வந்திருந்தார்கள் எனவும்,இதன் காரணமாகவே சில காரணங்களை கூறி பாஜகவினர் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

15 seconds ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

34 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

1 hour ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

3 hours ago