ஒரே பாலினத்தவர் திருமணம் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுவில் ஏற்கனவே உள்ள சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இவ்வகை திருமணங்கள் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணையின்போது இந்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரும் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில் பத்தி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சட்ட அங்கீகாரம் கோரும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்கக்கூடாது, அவற்றை நிராகரிக்க வேண்டும். ஓரினச் சேர்க்கை குற்றமாகாது என்பதால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோருவது உரிமையாகாது.

திருமணம் என்பது மிகவும் புனிதமானது. இந்து, முஸ்லீம் உட்பட அனைத்து மதங்களும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைவதை தான் திருமணம் என்கின்றன. நம்முடைய பாரம்பரியம், கலாசாரம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவையும் அதே முறைதான் என்கின்றனர். இந்த இயற்கை நீதி, நியதிக்கு எதிராக, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை அங்கீகரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தது.

இந்த மனுவை, முக்கிய வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. அதன்படிபாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க கோரிய வழக்குகள், கடந்த மே 11ம் தேதி தலைமை நீதிபத்தில் உட்பட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்