இடஒதுக்கீடு இல்லாமல் உ.பி உள்ளாட்சி தேர்தல்.? உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்.!
உபியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்திர பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான (OBC) இடஒதுக்கீடு இல்லாமல் உத்திர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என அண்மையில் உத்திர பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக ஓபிசியினரின் அரசியல் பின்தங்கிய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 31 வரை அவகாசம் அளித்துள்ளது.