தேர்தல் ஆணையர் நியமனம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
தலைமை தேர்தல் அதிகாரிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பணி நியமன பிரிவு சட்டம் 1991ஆம் ஆண்டு பிரிவு 4இன் படி பதவிக்காலமானது 6ஆண்டுகள் இருக்க வேண்டும். அல்லது வயது வரம்பு 65 பூர்த்தி அடைந்தால் பதவியில் இருந்து விலக வேண்டும்.
ஆனால், நெடுங்காலகமாக தலைமை தேர்தல் ஆணையர்களின் பதவி காலமானது மிகவும் குறுகிய காலத்திலேயே முடிந்து விடுகிறது என பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, கடந்த கால ஆட்சியின் போதும் சரி, தற்போதும் சரி தலைமை தேர்தல் அதிகாரி எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவும்,
அண்மையில் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அருண் கோயல் எப்படி நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் குறித்த ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் , தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறைகள் பற்றியும் உச்சநீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து , மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்ற அமர்வு.